என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல் சின்னங்கள் அகற்றம்"
திண்டுக்கல் பாராளு மன்றத் தொகுதிக்குட்பட்ட நத்தம் தொகுதியில் தேர்தல் சின்னங்கள் மற்றும் சுவர் விளம்பரம் அகற்றப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் பாராளு மன்றத் தொகுதிக்குட்பட்டது நத்தம் சட்டமன்ற தொகுதியாகும்.இதில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்குவந்ததை தொடர்ந்து நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல்கட்சி சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், மற்றும் விளம்பர பேனர்கள் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. மேலும் பஸ்நிலையம், கோவில்பட்டி, அவுட்டர், மூன்றுலாந்தர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதுதவிர சுவர் விளம்பரங்கள், விளம்பர பேனர்கள், வைப்பதற்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், துப்புரவுபணி மேற்பார்வையாளர் சடகோபி,மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.






