என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெஜெ நகர்"

    ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் ரோட்டில் ஒரு பெரிய குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கார்கள் எரிந்து நாசமானது.

    அம்பத்தூர்:

    ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் ரோட்டில் ஒரு பெரிய குடோன் உள்ளது.

    இதில் ஆட்டோ கேரேஜ், மோட்டார்ஸ் பெயிண்டிங் கடை, கார் மெக்கானிக் கடை ஆகியவை உள்ளன.

    நேற்று இரவு கடைகளை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இந்த குடோனில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஜெ.ஜெ.நகர், கோயம்பேடு தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 9 கார்கள், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை எரிந்து நாசமாயின.

    ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப் பதிவு செய்தார். தீ விபத்துக்கு காரணம் என்ன? மின்கசிவு காரணமா? மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×