என் மலர்

  நீங்கள் தேடியது "six people killed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #PlaneCrash
  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

  விமானத்தை அதன் உரிமையாளரும், விமானியுமான ஜெப்ரே வெயிஸ் (வயது 65) இயக்கினார். அவருடன் இந்த விமானத்தில் 5 பேர் பயணம் செய்தனர்.

  இந்த விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

  இதனால் அந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் ஜெப்ரே வெயிஸ் உள்பட விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

  விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.  #PlaneCrash 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பொதுமக்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Pulwamaencounter #Militantskilled #Peoplekilled
  ஜம்மு:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.
   
  அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

  இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.  மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இன்றைய என்கவுண்டரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சண்டையின்போது நமது பாதுகாப்பு படையினர் மிகவும் கவனமாக நடந்து கொள்ள தவறி விடுகின்றனர். இந்த வார இறுதி நாளும் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். #Pulwamaencounter #Militantskilled #Peoplekilled
   
  ×