என் மலர்
நீங்கள் தேடியது "Silukkuvarupatti Singam"
விஷ்ணு விஷால் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சவுந்தர்ராஜா, இந்த படத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்ததில் மகிழ்ச்சி என்றார். #Soundararaja
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சவுந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் என இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான, வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சவுந்தரராஜாவின் நடிப்பிற்கு பாராட்டு கிடைத்துள்ளது. இதுகுறித்து சவுந்தரராஜா கூறும்போது, ரசிகர்களை சிரிக்க வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்றார்.

சுந்தரபாண்டியன் படத்தில் தன் பயணத்தை தொடங்கிய சவுந்தரராஜா நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டாகியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
அவரது நடிப்பில் அடுத்ததாக, கள்ளன், அருவா சண்ட உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. #Soundararaja #SilukkuvarupattiSingam






