search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Signal repair"

    • சிக்னல் பழுதானதால் ரெயில்கள் தாமதமானது.
    • இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள திருமங்கலம் விமான நிலைய சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும். இதற்கு அடிக்கடி இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு திருமங்கலம் ெரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயில் திருமங்கலம் - மதுரை ரயில் பாதை ஒற்றை வழி பாதை என்பதால் கிராஸ்ங்கிற்காக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 7.50 மணிக்கு சென்னையிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ெரயில் நிலையம் வந்தடைந்தது.

    ஒரு சில நிமிடம் நின்று விட்டு புறப்பட தயாரான போது ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கேட்கிப்பர் மூடிய போது ஏற்கனவே ஒரு முறை கேட் அடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றபடி இருந்தது.

    இந்நிலையில் திடீரென கேட் மூடப்படுவதை அறிந்த கார் ஓட்டுநர் பாதையை கடக்க முயன்றபோது ரயில்வே கேட் மீது கார் மோதியதில் கேட் சேதம் அடைந்தது. இதனால் ெரயில்வே கேட் சேதம் அடைந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயில் செல்ல முடியாமல் நின்றது.

    இதையடுத்து ெரயில்வே ஊழியர்கள் கேட்டை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்காக தற்காலிகமாக கோளாறு சரி செய்யப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ஏற்கனவே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வந்து மீண்டும் அரை மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்தநிலையில் கேட் பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருமங்கலம் விமான நிலைய சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஏற்கனவே அடிக்கடி கேட் மூடப்பட்டு தாமதமாகி வருவதால் மேம்பாலம் கட்ட பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசியல்வாதிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் அடிக்கடி கேட் இதுபோன்று பழுதடைந்து விடுவதாகவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ×