search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop plastic"

    தொண்டிபேரூராட்சி பகுதி கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தடுக்க பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி பகுதியானது கடற்கரை பகுதி.இங்குள்ள வணிக நிறுவனங்களில் பேரூராட்சி மூலம் அடிக்கடி பிளாஸ்டிக்கை ஒழிக்க நோட்டீசுகள் மற்றும் வாகனங்களில் பொது மக்களுக்கு அறிவுறுத்தியும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது சவாலான காரியமாக உள்ளது.

    ஒருகடையில் ஆய்வு செய்யும் செய்தி கேட்டு மற்ற கடைக்காரர்கள் தாங்கள் வைத்துள்ள பிளாஸ்டிக் பைகளை மறைத்து விடுகின்றனர்.

    அதனால் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடை உள்ளே சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தும், உடனடியா அபராதம் விதித்தனர். இதில் சுகாதார மேஸ்திரி கோவிந்தன், அலுவலக பணியாளர் கண்ணன் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பெரும்பாலான கடைக்காரர்கள் துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து துணிப்பைகளை எடுத்து வராததால், வாடிக்கையாளரிடம் பொருட்கள் வாங்கும் போதே துணிப் பைக்கான தொகையையும் கடைக்காரர்கள் வசூலித்து விடுகின்றனர்.

    பொது மக்களும் பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்த மாட்டோம், கடைகளில் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் நிலை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    ×