search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sholavandan shop"

    சோழவந்தான் கடைகளில் 3வது நாளாக சுகாதார மேற்பார்வையாளர்கள் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சோழவந்தான்:

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் வைக்கப்பட்டு இதில் மண்பானை, இலையால் தயாரிக்கப்பட்ட மற்றும் சாக்குப்பை, துணிப்பை அன்றாடும் பொதுமக்கள் பொருட்கள் பயன்படுத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்கவும் இதற்கு மாறாக 12 வகை பொருட்களும் அதற்கான விளக்கங்களும், அடங்கிய ஸ்டிக்கர் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மாற்றுப் பொருட்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஓட்டல், டீக்கடை, பூ கடை, கறிக்கடைகளில் இலைகளில் மடித்து கொடுத்து வருகின்றனர். பலசரக்கு கடையில் ஸ்வீட் கடை காகிதப் பைகளிலும் ஜவுளிக்கடையில் துணிப்பையிலும் வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    சோழவந்தானில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று 5 பேர் கொண்ட குழு மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு, சுகாதார ஆய்வாளர் கணேசன், பணியாளர்கள் முத்துக்குமார், சிவகுமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசிமலை, பசுபதி, உதவியாளர்கள் சதீஷ், புவலிங்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தை சேர்ந்தவர்களும் இங்கு உள்ள கடைகளில் மூன்றாவது நாளாக சோதனை செய்தனர். இதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களிடம் துணிப்பையை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


    ×