search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shoaib Akthar"

    டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷுக்கு வழங்கப்பட்டது.
    துபாய்:

    டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று முன்தினம் நடந்த  இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 

    ஆட்டநாயகன் விருது மிட்செல் மார்ஷுக்கும், தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான  அரையிறுதி போட்டியில் டேவிட் வார்னர் 30 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.மேலும் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    நாக் அவுட் போட்டிகளில் அதிக அழுத்தத்தை கடந்து சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னருக்கு இந்த டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 289 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் விருது நியாயமற்றது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தத் தொடரின் நாயகனாக பாபர் அசாம்  வருவதைக் காண மிகவும் ஆவலுடன் இருந்தேன். நிச்சயமாக இது நியாயமற்ற முடிவு என பதிவிட்டுள்ளார்.

    ×