search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivnarine"

    • தன்னுடைய 3-வது போட்டியிலேயே ஜிம்பாப்வேவுக்கு எதிராக தேஜ்நரின் முதல் சதமடித்து அசத்தியுள்ளார்.
    • சிவ்நரின் சந்தர்பால் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்களை அடித்துள்ளார்.

    புலவாயோ:

    வெஸ்ட் இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க நாளில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட், தேஜ்நரின் சந்தர்பால் தலா 55 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் காலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தேனீர் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய இருவரும் சதம் அடித்தனர். ஒரே இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் அடிப்பது 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

    இதில் தேஜ் நரினுக்கு இது முதலாவது சதமாகும். இவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஷிவ்நரின் சந்தர்பாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெய்ட் 116 ரன்களுடனும் (246 பந்து, 7 பவுண்டரி), தேஜ்நரின் 101 ரன்களுடனும் (291 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    தன்னுடைய 3-வது போட்டியிலேயே ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் சதமடித்து அசத்தியுள்ளார். முன்னதாக சிவ்நரின் சந்தர்பால் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்களை அடித்துள்ள நிலையில் தற்போது அவரது மகனும் முதல் முறையாக சதமடித்துள்ளார்.

    இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சதமடித்த முதல் தந்தை மகன் ஜோடி என்ற சாதனையை படைத்த அவர்கள் உலக அளவில் 12-வது தந்தை மகன் ஜோடி என்ற பெருமையும் பெற்றனர்.

    அந்த பட்டியல்:

    1. லாலா - மொஹிந்தர் அமர்நாத் (இந்தியா)

    2. கிறிஸ் - ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து)

    3. ஹனிப் - சோயப் முகமது (பாகிஸ்தான்)

    4. வால்டர் - ரிட்டர் ஹாட்லி (நியூஸிலாந்து)

    5. இப்திகார் - மன்சூர் அலி கான் பட்டோடி (இந்தியா, இங்கிலாந்து)

    6. ஜெப் - ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா)

    7. நாசர் - முடாசர் (பாகிஸ்தான்)

    8. கென் - ஹமிஸ் ரூத்தர்போர்ட் (நியூசிலாந்து)

    9. விஜய் - சஞ்சய் மஞ்ரேக்கர் (இந்தியா)

    10. தேவ் - டுட்லி நர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)

    11. ராட் - டாம் லாதாம் (நியூஸிலாந்து)

    12. சிவ்நரேன் - தக்நரேன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்)

    ×