என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiv Sena Petition"

    • குற்றவாளிகளை விடுதலை செய்வதில் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது.
    • குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சாதாரணமான குற்றவாளிகள் அல்ல

    திருப்பூர் : 

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தலைவர்கள் பிறந்த நாள்களில் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு மன்னிப்பு கொடுப்பது, விடுதலை செய்வது என்பது ஒரு வழக்கமாக உள்ளது.அதன் பெயரில் குற்றவாளிகள் தப்பித்து வருகிறார்கள். ஆனால் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்வதில் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    மேற்படி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சாதாரணமான குற்றவாளிகள் அல்ல. பொருளாதார சீர்கேடுகளை உண்டு பண்ணுதல் போன்ற குற்றங்களை செய்து மன்னிக்க தகுதியில்லாத நிலையில் சிறையில் உள்ளார்கள். மேற்படி நபர்களை விடுதலை செய்ய தி.மு.க., அரசு முனைப்பு காட்டுவதை சிவசேனா கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    மேலும் தி.மு.க. அரசு சிறுபான்மையினர்களின் ஓட்டு வங்கிக்காக மேற்படி செயல்களில் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. இது நாட்டு மக்களின் இயல்பான வாழ்வியலை சீர்குலைக்கும் நோக்கமே ஆகும். எனவே கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்க தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×