search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shelter at the police station"

    • நேற்று காலை 11 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுது கொண்டே , மிகுந்த பதற்றத்துடன் ஓடி வந்தார்.
    • போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை 11 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுது கொண்டே , மிகுந்த பதற்றத்துடன் ஓடி வந்தார். போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். மேலும் அவர் இந்தி மொழி பேசியதால், இந்தி தெரிந்த நபரை வரவழைத்து, அவர் மூலமாக அந்த வாலிபரிடம் விசாரித்தனர். 

    விசாரணையில், நேபாளம் நாட்டைச் சேர்ந்த 5 பேர் கேரளாவில் ஓட்டலில் வேலை செய்ய, ெரயிலில் தன்னை அழைத்துச் சென்ற

    னர். ‌அப்போது அவர்கள், தன்னை மிகப் பெரிய தொகைக்கு அங்கு விற்று

    விட வேண்டும் என பேசினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நான், உடனடியாக சேலம் ெரயில் நிலையத்தில் இறங்கி வெளியே ஓடி வந்து விட்டேன்.

    மேலும் கடத்தல்காரர்கள் தன்னை பின் தொடர்ந்து வருவதாக நினைத்துக் கொண்டு, மிகுந்த பதற்றத்துடன் பஸ்சில், ஏறி சேலம் பழைய பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து அன்னதானப்பட்டிக்கு வந்ததாகவும் அவர் போலீ சாரிடம் தெரிவித்தார். 

    இதையடுத்து போலீசார்

    அவரை சேலம் ெரயில்வே

    போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கடத்தல் கும்பல் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    ×