search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Severe alert"

    • அப்போது துப்புரவு பணியாளர்கள் கையில் உறைகள் மட்டும் அணிந்திருந்தனர்.
    • ஒப்பந்ததாரரை நேரில் அழைத்தும் வரவில்லையா என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக 300-க்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்களைக் கொண்டு குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. கடலூர் மாநகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 162 பேர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த வாரம் கலெக்டர் அருண் தம்புராஜ், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், குப்பை அகற்றும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து , இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் துப்புரவு பணியாளர்களை மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு பணியாளர்கள் கையில் உறைகள் மட்டும் அணிந்திருந்தனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நேரில் வரவில்லை. அதற்கு மாறாக ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அருண் தம்புராஜ் கடும் அதிர்ச்சி அடைந்து, ஆய்வு கூட்டத்திற்கு ஒப்பந்ததாரரை நேரில் அழைத்தும் வரவில்லையா என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பேசுகையில், எங்களுக்கு தற்போது குப்பைகள் அள்ளுவதற்கு கை உறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாகன வசதிகள் சரியான முறையில் வழங்கவில்லை . தற்போது வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் அதனை நாங்களே செலவு செய்து சரி செய்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இது மட்டுமின்றி குப்பைகள் கொண்டு செல்வதற்கு சாக்குகளும் அதற்கான வசதிகளும் இல்லை. மேலும் அகற்றப்பட்ட குப்பைகள் கொண்டு செல்வதற்கு, ஜேசிபி வசதி இல்லாததால், குப்பைகளும் கொட்ட முடியவில்லை என சரமாரியாக புகார் அளித்தனர்.

    இதனை கேட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சியை சுகாதாரமாக பேணிக்காப்பதற்காக தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக குப்பைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் ஆய்வு செய்த போது, எப்படி இருந்ததோ அதேபோல் தற்போதும் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உடனடியாக மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா மற்றும் மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, கவுன்சிலர்கள் சுதா அரங்கநாதன், சுபாஷினி ராஜா, சக்திவேல், சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×