என் மலர்
நீங்கள் தேடியது "Setu.Karunas Report"
- ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.
- முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் சேது.கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பரமக்குடி
முக்குலத்தோர் புலிப் படை கட்சியின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேது.கரு ணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கள்ளர், மறவர், அகமு டையர் ஆகியோர் "தேவரி னம்" என்று 1994 ஆம் ஆண்டு அரசு அறிவித்த அரசாணையை நடை முறைப்படுத்த வேண்டும். மதுரை விமான நிலையத் திற்கு சுதந்திரப் போராட்டத் வீரர் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்தி அதன் அடிப் படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016-ல் சட்டமன்ற உறுப்பி னராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து பலமுறை சட்டப்பேரவையில் வலியு றுத்தி வந்துள்ளேன்.
தமிழ்நாட்டில் ஜாதிவாரி யான புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் 2020 ஆம் ஆண்டு இறுதியில் எடப் பாடி கே.பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது ஆணையம் அமைக்கப்பட் டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களில் தேர்தல் அறி விக்கப்பட்டதால் ஆணையத் தின் காலக்கெடு நீட்டிக்கப்ப டாமல் செயல் இழந்தது.
அதற்கு முன்பாகவே பிற்படுத்தப்பட்ட ஜாதியி னர் குறித்து ஆராய 1969-ல் சட்டநாதன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட் டது. இந்த ஆணையம் பழைய புள்ளி விவரங்க ளின்படியே தனது பரிந்து ரைகளை அளித்தது. 1983-ல் அம்பாசங்கர் தலைமை யில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையமும் மாதிரி கணக்கீடு முறையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பரிந்துரைகள் அளித் தது.
இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 1931 ஆங்கிலேயர் காலத்துக்கு பின்பு இந்தியாவில் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வில்லை என்றும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்த வேண்டும் என்றும் தனது மனுவில் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இந்தியா முழுவதும் ஜாதிவா ரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என 2010-ல் தீர்ப்பு வழங்கினர். இதற்கு மத்திய அரசும் ஒப்பு தல் அளித்தது. இவ்வாறு நீதிமன்றங்களில் பல்வேறு கருத்துகள் இருப்பதால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன் னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரனையில் 2021 நவம்பரில் உச்சநீதி மன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத் தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதி வாரியாக கணக்கெ டுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கி றோம்.
தமிழக அரசு புள்ளிவிவர சேகரிப்பு சட்டம் 2008-ன் படி ஜாதிவாரி சமூக, கல்வி, பொருளாதார கணக்கெ டுப்பு நடத்தி தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., டி.என்.டி., எஸ்.சி., எஸ்.டி. சமூகங்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். எல்லா ஜாதியினரை பற்றி யும் துல்லியமாக தகவல்க ளும், புள்ளி விவரங்களும் ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைத்தால் மட்டுமே அரசு நலத்திட்டங்களில் உண்மையான பலன்கள், இதுவரை கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கும் கிடைக்கபடும் என்ற வாத மும் உள்ளது.
எனவே ஜாதிவாரி கணக்கு எடுப்பு மட்டுமே இதனை உறுதிப்படுத்தும் ஒரே கருவி. கல்வி நிறுவ னங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக்கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும். எனவே தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் உடனடியாக ஜாதி வாரி யான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஆணையம் அமைத்து, புள்ளி விவரங்கள் அடிப்ப டையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.






