என் மலர்
நீங்கள் தேடியது "Selection of Guards"
- 4 கல்லூரிகளில் எஸ்.பி. ஆய்வு
- தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவுகளை
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் வருகிற 27-ந் தேதி காவலர் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு மையங்களாக மருத கேசரி மகளிர் ஜெயின் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு மையங்களை நேற்று போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது அங்கு ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவுகளை பிறப்பித்தார்.
இந்த ஆய்வின்போது வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.






