என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seized logs"

    • வனச்சரகர் அலுவலகத்தையொட்டி வன ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது.
    • லாரி மூலம் கூடலூரில் உள்ள மரம் அறுக்கும் ஆலைக்கு கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே பிதிர்காடு வனச்சரகர் அலுவலகத்தையொட்டி வன ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு மரத்துண்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனச்சரகர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராவை ஆப் செய்து விட்டு, வளாகத்திற்குள் லாரி வந்து உள்ளதாகவும், அங்குள்ள மரத்துண்டுகள் லாரி மூலம் கூடலூரில் உள்ள மரம் அறுக்கும் ஆலைக்கு கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில் உதவி வன பாதுகாவலர் கருப்புசாமி வனச்சரக அலுவலக வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வனச்சரகர் அய்யனார் மற்றும் வனத்துறையினர் கூடலூர் மரம் அறுக்கும் ஆலையில் இருந்து கடத்தல் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×