என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea fish increased by Rs.50"

    • கடல் மீன்களின் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது
    • கடன் மீன்களும், மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது

    சேலம்

    சேலம் சூரமங்கலம் தர்மா நகர் மற்றும் வ.உ.சி. பூ சந்தை பின்புறம் ஆகிய இடங்களில் மீன் மார்க்கெட்டு செயல்படுகிறது. இங்கு தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கடன் மீன்களும், மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் குளம், குட்டை, ஏரிகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்களும் அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. தற்போது மீன்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை சரிந்துள்ளது. ஆனால் அதே வேளையில் கடல் மீன்களின் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் விற்கப்பட்ட கடல் மீன்கள் விலையை காட்டிலும் இன்று மீன்களின் விலை ரூ.50 வரை உயர்ந்திருக்கிறது. அதன்படி இன்று சங்கரா ஒரு கிலோ ரூ.350-க்கும், மத்தி ரூ.200, ஊளி ரூ.400, கடல் பாறை ரூ.580, கொடுவா ரூ.670, வஞ்சிரம் ரூ.750, அயிலை ரூ.220-க்கும் விற்பனையானது. இது பற்றி வியாபாரிகள் கூறுகையில் கடல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் நடப்பு மாதம் புரட்டாசி மாதம் என்பதால் மீன்கள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் விலை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது. வளர்ப்பு மீன்கள் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. ஆனால் வளர்ப்பு மீன்களின் விலை குறைந்துள்ளது என்றனர்.

    ×