என் மலர்
நீங்கள் தேடியது "Science Laboratory"
- அறிவியல் ஆய்வக கட்டிடத்திற்கு அரசு ரூ.17.34 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
- கட்டிடத்தினை பொள்ளாச்சி எம்.பி., கு.சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.
மடத்துகுளம் :
மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆய்வக கட்டிடம் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்காக அரசு ரூ.17.34 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணி நிறைவு அடைந்தது. இந்த கட்டிடத்தினை பொள்ளாச்சி எம்.பி., கு.சண்முகசுந்தரம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் காவியா அய்யப்பன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசு துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.






