search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scent Jasmine price low"

    • திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தனி ஆர்வம் காட்டுவது உண்டு.
    • திருவிழா மற்றும் பண்டிகை காலம் என்பதால் விவசாயிகள் செண்டு மல்லி பூக்கள் சாகுபடி செய்து உள்ளனர்.

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தனி ஆர்வம் காட்டுவது உண்டு. குறிப்பாக சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செண்டுமல்லி, முல்லை, கனகாம்பரம், வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது கோவில் திருவிழா மற்றும் பண்டிகை காலம் என்பதால் விவசாயிகள் செண்டு மல்லி பூக்கள் சாகுபடி செய்து உள்ளனர். மழையும் நன்றாக பெய்ததால் நோய் தாக்குதலின்றி செண்டுமல்லி பூக்களின் விளைச்சலும் அதிகரித்து உள்ளது. எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பண்டிகை காலத்தை முன்னிட்டு செண்டுமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. செண்டு மல்லி வழக்கத்தைவிட மிக அதிக அளவில் விளைச்சல் ஆகி உள்ளது. ஆனால் விவசாயிகள் எதிர்ப்பார்த்த அளவில் விலை இல்லாதது பெரும் கவலை அளிக்கிறது. இதனால் போட்ட முதலே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ செண்டுமல்லி பூக்கள் ரூ.20 முதல் 25 வரை மட்டுமே விலை போவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இது போன்ற காலங்களில் அரசு இழப்பீட்டுத்தொகை வழங்கி பூ சாகுபடி செய்யும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

    ×