search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S.B. Velumani emphasis"

    • முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி மத்திய மந்திரியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
    • மத்திய அரசு, 50 ஆயிரம் டன் கொப்பரை கொள் முதல் செய்ய ஒதுக்கியுள்ளது.

    கோவை:

    கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த, மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரை, முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி, ஈஷா யோகா மையத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு நிதி யாக, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு கிலோவுக்கு 150 ரூபாய் வழங்க வேண்டும்.மத்திய அரசு, 50 ஆயிரம் டன் கொப்பரை கொள் முதல் செய்ய ஒதுக்கியுள்ளது.

    ஆனால், தமிழக அரசு, 30 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. எனவே, தமிழக அரசு, முழுமையாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில், மத்திய அரசின் எந்த திட்டமும் முழுமையாக செயல் படுத்தப்படுவதில்லை.

    அ.தி.மு.க., ஆட்சியின் போது, மத்திய அரசின் திட்டத்தில், ஏராளமான வீடுகள் கட்டப்பட்டன. தற்போது, தி.மு.க. அரசு உள்ளாட்சி அமைப்புகளை செயல்பட விடுவதில்லை.

    'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், அடுக்குமாடி குடியிருப்பு, 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்ங்களிலும், தி.மு.க. குளறுபடி செய்துள்ளது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மத்திய மந்திரியிடம் மனு அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×