search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjeevi Anjaneyaru"

    • ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்றுப்படி வைபவம் நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

    திருச்சி:திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமநவமி மற்றும் மார்கழி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று நடைபெறும் அனுமன் ஜெயந்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 10-வது ஆண்டாக 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றுதல் விழா மற்றும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது.விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன் பின்னர் வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலைகள் சாற்றுதல் விழா காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு துளசி மாலை, வெற்றிலை மாலை கொடுத்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு வடை மற்றும் ஜாங்கிரி பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.இதேபோல் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் முன்னதாக நேற்று (22-ந்தேதி, வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 9 மணிக்கு உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் ஸ்ரீமகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. 11 மணிக்கு கோ பூஜை, மதியம் 12 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது.இன்று (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்றுப்படி வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டனர். அவர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.நாளை (24-ந்தேதி) காலை 7 மணிக்கு ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றுப்படி வைபவம் நடக்கிறது. 25-ந்தேதி காலை 11 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், கண்ணையன், புண்ணியமூர்த்தி, வெங்கடேஷ் பாபு, சிவக்குமார், சட்ட ஆலோசகர்கள் கனகராஜா, கேசவன், பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் என்ற செந்தாமரைக்கண்ணன், ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் அன்னதான கமிட்டி முகேஷ், ஆஷிஷ்குமார், பரேஷ் பட்டேல் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×