search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samu Nasser"

    • பச்சைப் பயறு கொள்முதல் செய்யும் திட்டத்தை திருவள்ளுர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
    • ஒரு ஹெக்டேருக்கு 384 கிலோ வீதம் 1,200 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் ராபி பருவம் 2022-23-ல் பச்சைப்பயறு, சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட பச்சைப்பயறு அறுவடை தற்போது தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ், பச்சைப் பயறு கொள்முதல் செய்யும் திட்டத்தை திருவள்ளுர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து 3 விவசாயிகளுக்கு நெல் விளைபொருளுக்காக ரூ.5.10 லட்சம் மதிப்பில் பொருளீட்டுக் கடன் பெற்றதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளையும், 3 உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கப்படுவதற் கான அனுமதி ஆணை களையும், 2 விவசாயிகளுக்கு பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகளையும் அமைச்சர் வழங்கினார்.

    இதுகுறித்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஒரு ஹெக்டே ருக்கு 257 கிலோ வீதம் 675.65 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப் பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தர குறியீட்டின் படி கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் ஒன்றுக்கு ரூ.4.80 வீதம் உயர்த்தப்பட்டு ரூ77.55 என்ற விலைக்கு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் விவசாயிகளிடம் இருந்து பச்சைப்பயறு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு ஹெக்டேருக்கு 384 கிலோ வீதம் 1,200 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப் பட்டுள்ளது.

    எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வரும் மே 29-ந் தேதிக்குள் தங்களின் ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன், திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் சீனிராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×