என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAMATH SCHOOL"

    • திருச்சி காஜா நகரில் அழகுற அமைந்துள்ள சமது சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது
    • இந்த பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மெடிக்கல், என்ஜினீயரிங் போன்ற உயர் படிப்புக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் முகமாக ஊக்க பயிற்சிகள், தன்னம்பிக்கை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது

    திருச்சி:

    திருச்சி காஜா நகரில் அழகுற அமைந்துள்ளது சமது சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளி ஐ.எஸ்.ஓ. 2009 தரச் சான்றிதழ் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

    1964-ல் மஜ்லிசுல் உலமாவால் இப்பள்ளி துவங்கப்பட்டது. தற்போது பள்ளியின் தாளாளராக இருக்கும் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுகைல் நம்மிடம் கூறும்போது, ஆரம்பத்தில் 8-ம் வகுப்பு வரைதான் இந்த பள்ளி துவங்கப்பட்டது.

    2001-ல் எஸ்.எஸ்.எல்.சி.வகுப்பு வரையிலும், 2012-ல் பிளஸ்-2 வரையிலும் தரம் உயர்த்தப்பட்டது. 1964-ல் இருந்து 1970 வரை 175 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றார்கள்.

    ஆனால் 2000-ல் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 640 ஆகவும், 2008-ல் 1,000 ஆகவும், தற்போது ,2000 பேராகவும் இருக்கின்றார்கள். மஜ்லிசுல் உலமாவால் இப்பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டாலும் இதை நிறுவியவர்களில் மறக்க முடியாதவர் அப்துல் காதர் சாஹிப். உலமாவில் மஜ்லி சுல் செயலாளராக இருந்தபோது தனது சகோதரர் அப்துல் சமது பெயரில் இக்கல்விக்கூடத்தை நிறுவினார்.

    பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில கல்வி அவசியம் என உணர்ந்ததால் தொடக்கத்திலேயே சி.பி.எஸ்.இ. பள்ளியாக நிறுவப்பட்டது. இந்த பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மெடிக்கல், என்ஜினீயரிங் போன்ற உயர் படிப்புக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் முகமாக ஊக்க பயிற்சிகள், தன்னம்பிக்கை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வுக்கு தயார்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

    இந்தப் பள்ளியில் நன்கொடை என்பது அறவே கிடையாது. மற்ற பள்ளிகளை விட மிகச் சிறந்த தரத்துடன் குறைவான கட்டணத்தில் சிறப்பான கல்வி அளிக்கப்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.

    விடுதியில் தங்கி உள்ள இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான, சிறப்பான உணவு அளிக்கப்படுகிறது. நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் இந்த முறையும் தமது பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    இந்தப் பள்ளியின் தலைவராக டாக்டர் காஜா நஜூதீன், பள்ளியின் பொருளாளராக ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர் ஆகியோரின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலில் கமிட்டி உறுப்பினர்களின் ஆதரவோடு பள்ளியை நிர்வகித்து வருகின்றோம்.

    பள்ளியின் முதல்வர் சாக்கோ மற்றும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். தற்போது பள்ளியில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலைமலரில் வெளியாக உள்ள கல்வி மலர் சிறக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    ×