என் மலர்
நீங்கள் தேடியது "Sale of alcohol in bottles"
- அம்மாவாசை இன்று அதிகாலையில் புதுவை மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மாவாசையை கைது செய்தனர்
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை (வயது 55). இவர் இன்று அதிகாலையில் புதுவை மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து அதே பகுதியில் உள்ள இவரது வீட்டின் பின்புறம் வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
இதில் அம்மாவாசை கையும் காலமாக பிடிபட்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மாவாசை கைது செய்தனர் அவரிடம் இருந்து புதுவை 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தி வந்த மது பாட்டில்களை எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






