search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sacred Heart Church"

    • வருகிற 14-ந்தேதி இடைக்காட்டூர் திருஇருதய ஆலயத்தில் பாஸ்கா திருவிழா தொடங்குகிறது.
    • விழாவில் லேசர் திரைகளில் இயேசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திரு இருதய திருத்தலம் 140 ஆண்டுகள் புகழ்மிக்க ஆலயம் ஆகும். இங்கு ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளி சிறப்பு வெள்ளியாக கருதபட்டு சிறப்பு திருப்பலி பூஜை, கூட்டு பிராத்தனை நடை பெறும்.

    இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இடைக்காட்டூர் திருஇருதயஆண்டவர் 140வருடத்திற்கும் மேலாக இங்கு ஏப்ரல் மாதம் 2நாட்கள் பாஸ்கா திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான பாஸ்கா திருவிழா வருகிற 14, 15தேதிகளில் இரவு இடைக்காட்டூரில் உள்ள கிறிஸ்து அரங்கில் நடைபெற உள்ளது.

    விழாவில் டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்பில் லேசர் திரைகளில் இயேசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகளை கலைஞர்கள் தத்ரூபமான முறையில் நடத்தப்படும்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை நடித்து காண்பித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். 2நாட்கள் விடிய விடிய நடைபெறும். இதை காண ஏராளமான பக்தர்கள் இடைக்காட்டூர் வருவார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை, மரியின் ஊழியர் சபை கன்னியர் செய்து வருகின்றனர்.

    ×