search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SACHIR HUSSAIN COLLEGE"

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இந்திய சமூக ஆராய்ச்சி கவுன்சில் கருத்தரங்கம் நடந்தது.
    • தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 140 ஆய்வு கட்டுரைகளை அனுப்பி வைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பில் இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் இந்திய சமூக ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக 2 நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது .

    முதல் நாள் கருத்தரங்கில் துறை தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார் பேராசிரியர் நசீர்கான் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினராக புதுடெல்லி இந்திய பொது நிர்வாக நிறுவன பேராசி ரியர் சுரேஷ் மிஸ்ரா கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 140 ஆய்வு கட்டுரைகளை ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனுப்பி வைத்தனர். அதை வணிகவியல் துறை சர்வதேச தரவரிசை புத்தகத்தை பேராசிரியர் சுரேஷ் மிஸ்ரா, பாரதியார் பல்கலை கழக பேராசிரியை சுமதி ஆகியோர் வெளியிட அதை கல்லூரி ஆட்சி குழு தலைவர் அகமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அகது, ஆட்சி குழு உறுப்பினர் ஹமீது தாவூது, அப்துல் சலீம், சிராஜுதீன் முதல்வர் அப்பாஸ் மந்திரி பெற்றுக் கொண்டனர். உதவி பேராசிரியர் - கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார் .

    முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலைவர் சுமதி பங்கேற்று பேசினார். 2-ம் அமர்வில் சிறப்பு விருந்தினராக மைசூர் எஸ்.டி. எம். மேலாண்மை மேம்பாடு கல்வி நிறுவன பொருளாதார உதவி பேராசிரியர் ரியாஸ் அகமது பங்கேற்று பேசினார்.

    கருத்தரங்கின் 2-ம் நாளில் உதவி பேராசிரியர் சம்சுதீன் இப்ராகிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தின ராக மைசூர் பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் நாகராஜா பங்கேற்று இந்திய பொருளாதாரத்தில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார்.

    மற்றொரு அமர்வில் உதவி பேராசிரியர் பவுசியா சுல்தானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலை வர் கிருஷ்ணகுமார் நவீன வங்கி செயல்பாட்டில் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து பேசினார்.

    நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் பிராந்திய இயக்குநர் சதக்கத்துல்லா பங்கேற்று பேசினார். உதவி பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.

    ×