என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sabhash naidu
நீங்கள் தேடியது "Sabhash Naidu"
கமலின் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு முடிவடையாததால், ஷங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்தின் புதிய பிரச்சனை எழுந்திருக்கிறது. #Kamal #Indian2
அரசியலை ஒரு பக்கம் கவனித்துக்கொண்டே இன்னொரு பக்கம் சினிமா, டிவியிலும் கவனம் செலுத்துகிறார் கமல். இந்த மாதம் துவங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்து அவர் நடிப்பில் விஸ்வரூபம்-2 வெளியாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே வெளியிட திட்டம் இருக்கிறது. காரணம் பிக்பாசில் வைத்து விளம்பரம் செய்தால் அது மக்களிடையே எளிதில் சேரும். பிக்பாஸ் முடிந்த பிறகு இந்தியன் 2 தொடங்க திட்டமிட்டு இருந்தார்கள்.
ஆனால் சபாஷ் நாயுடுவை முடித்துக் கொடுத்தால் தான் அடுத்த படத்தை தொடங்க விடுவோம் என்று தயாரிப்பு தரப்பில் அழுத்தம் தரப்பட்டதாம். எனவே மீதம் இருக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இந்தியன் 2-ஐ தொடங்கவிருக்கிறார். ஆகஸ்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் அவரது மகள் ஸ்ருதியும் நடிக்கிறார்.
×

X