என் மலர்
நீங்கள் தேடியது "Rs 4 lakh confiscated"
- 12 பேர் கும்பல் கைது
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை :
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு மணல் இட்டேரி பகுதியில் மெகா சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 12 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அைழத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரூ.4,16,790-யை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 12 பேரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.






