என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rooftop solar panels"

    • 1 கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது
    • சில வீடுகளின் மேற்கூரையில் மட்டுமே இது சாத்தியம் எனும் கருத்து நிலவுகிறது

    2024 ஜனவரி 22 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, பிரதான் மந்த்ரி சூர்யோதய் யோஜ்னா (Pradhan Manthri Suryoday Yojana) எனும் திட்டத்தை குறித்து விளக்கினார்.

    இதன்படி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கான தகடுகளை பொருத்தி மின்சார தன்னிறைவு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம், குடும்பங்களின் மாதாந்திர மின்சார தேவையை ஈடு செய்யவும், உபரியாக உற்பத்தி ஆகும் மின்சாரத்தை அரசுக்கு விற்று குடும்பத்தினர் வருவாய் ஈட்டவும் வழிவகை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

    இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது குறித்து பேசினார்.

    சுமார் 1 கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஓளி மின்சாரத்திற்கான தகடுகள் பொருத்தப்படும் என்றும் இதில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் அவர்களுக்கு 300 யூனிட் இலவசம் என்றும் தனது உரையில் தெரிவித்தார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று பசுமை எரிசக்தி துறை பங்குகளின் விலை, பங்குச்சந்தையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கெனவே சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான கட்டமைப்பை அமைக்க அரசு மானியம் வழங்குவது நடைமுறையில் உள்ளது.

    ஆனாலும், அரசின் இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பல பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    1 கிலோவாட் பவர் உற்பத்திக்கு ரூ.20 ஆயிரம் வரை மானியம் தரப்படுகிறது. ஆனால், 1 கிலோவாட் உற்பத்திக்கு சுமார் 10 சதுர மீட்டர் இடம் தேவை. சில வீடுகளின் மேற்கூரையில் மட்டுமே இது சாத்தியமாகும்.

    இதையும் தாண்டி தங்கள் வீட்டு உபயோகத்திற்கு மின்சார உற்பத்தி செய்ய விரும்பும் பயனர்கள், மின்சார வாரியத்திற்கு ஏன் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என புலம்புகின்றனர்.

    அரசாங்கம் வழங்கும் குடிநீரை பயன்படுத்த கட்டணம் வசூலிப்பது சரி. வீட்டு கிணற்றிலிருந்து நீரை பயன்படுத்துவதற்கு கட்டனம் வசூலிப்பது சரி அல்ல என உதாரணம் கூறும் பயனர்கள், குடும்பத்தினரின் சொந்த உபயோகத்திற்கு சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்வதற்கு அரசு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இது ஏற்க முடியாதது என்றும் கூறுகின்றனர்.

    மேலும், மானிய தொகையை அரசிடம் பெறுவதிலும் சிக்கல் நிலவுவதாக சமூக வலைதளங்களில் சில பயனர்கள் தெரிவித்தனர்.

    ×