search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roberto Martinez"

    பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், பிரான்ஸ் என எந்த அணியென்றாலும் சந்திக்க தயார் என்று பெல்ஜியம் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி லீக்கில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்திருந்த பலம் வாய்ந்த அணிகளான இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் காலிறுதி, அரையிறுதி மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து 8 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் 1-0 என வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    இந்த வெற்றியின் மூலம் காலிறுதி மற்றும் அரையிறுதியில் பெல்ஜியம் பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், பிரான்ஸ், உருகுவே அல்லது மெக்சிகோ ஆகிய 6 அணிகளில் ஒன்றுடன் பலப்பரீட்சை நடத்த வேண்டியிருக்கும். இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றாத பெல்ஜியம் அணி நாக்அவுட் சுற்றில் ஜப்பானை எதிர்கொள்கிறது. இதில் ஜப்பானை வீழ்த்திவிட்டால், அடுத்த இரண்டு போட்டி என்பது அக்னி பரீட்சைதான்.

    போட்டியென்று வந்துவிட்டால் எந்த அணியையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று பெல்ஜியம் பயிற்சியாளர் ரொபேர்ட்டோ மார்ட்டினஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரொபேர்ட்டோ மார்ட்டினஸ் கூறுகையில் ‘‘நாங்கள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து செல்வது அவசியமானது. ஆனால், எங்களுக்கு முன் யார் போட்டியாளராக வந்தாலும் எங்களால் எதிர்கொள்ள முடியும். இங்கிலாந்தை வீழ்த்தியது எனக்கு மகிழ்ச்சிதான்.

    உலகக்கோப்பையில் கணிப்புகள் என்பது கடினமானதுதான். நாங்கள் காலிறுதி, அரையிறுதி போட்டி குறித்து யோசிக்கவில்லை. தற்போது நாக்அவுட் சுற்றில் ஜப்பானை எப்படி எதிர்கொள்வதுதான் எங்களது முதல் நோக்கம்’’ என்றார்.
    ×