search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road work is Dangerous"

    • தேசிய நெடுஞ்சாலை பணியின் போது சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பதற்காக அந்த இடத்தில் 4 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது.
    • சீரமைப்பு பணி முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இதற்காக சாலை விரிவாக்க பணியின் போது அபிராமி நகர் அருகே உள்ள மின் கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது.

    அந்தப் பணியின் போது குடிநீர் குழாய் சேதமடைந்தது.இதை சீரமைப்பதற்காக அந்த இடத்தில் 4 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது சீரமைப்பு பணி முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது.

    ஆகவே பள்ளத்தைச் சுற்றி பேரிக்காடு வைக்கப்பட்டுள்ளது.இதனால் ரோடு குறுகலாக காணப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரியாததால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், கனரக மற்றும் பஸ்சுக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது பேரிக்கார்டில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×