என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road to Mortana Dam"

    • விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

    விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எம்.கோபால் கரும்பு விவசாயிகள் தலைவர் ஜி.கோவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் சத்யா, மகாலட்சுமி, தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், மாநில தலைவர் சண்முகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை ஆதரித்தும், ஆம்பூர் சர்க்கரை ஆலை உடனே திறக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி 600 ரூபாய் கூலி வழங்க கேட்டும் அவர்களை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்,

    குடியாத்தம்-ஜிட்டப்பல்லி, கொட்டாரமடுகு வழியாக மோர்தானா அணைக்கு சென்று வர சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும், அக்ராவரம் கால்நடை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும், அக்ராவரம் ஏரிக்கரை மீது வாகனங்கள் சென்றுவர சாலை வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×