search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "R.M.S"

    • அஞ்சல் துறையில் ஆட்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படுவது இல்லை.
    • பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கு இன்னும் பணிக்கொடை வழங்கப்படவில்லை.

    திருப்பூர் :

    அனைத்திந்திய அஞ்சல் ஆர். எம். எஸ். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 5- வது மாநில மாநில மாநாடு திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தேசியக்கொடியை வரவேற்புக் குழுத் தலைவர் எஸ். கார்த்திக்கேயன், மாநிலத் தலைவர் எம். கண்ணையன் ஆகியோர் ஏற்றினர். சங்ககொடியை மாநிலத்துணைத்தலைவர் எஸ். ரெங்கசாமி ஏற்றினார். மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் எம். கண்ணையன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் வரவேற்று பேசினார். அஞ்சலி தீர்மானத்தை கணேசன் வாசித்தார்.

    மாநாட்டு துவக்கவுரை நிகழ்த்திய சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் பேசுகையில் ,மத்திய அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பென்சன் திட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசு சீர்குலைக்கப் பார்க்கிறது. தற்போது அஞ்சல் துறையில் ஆட்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படுவது இல்லை. வட இந்தியர்கள் பெருமளவில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கு இன்னும் பணிக்கொடை வழங்கப்படவில்லை. அதனை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். அதனை பிடித்தம் செய்து வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக சுமிதா அயோத்யா கலந்து கொண்டார். அனைத்திந்திய பொதுச்செயலர் ராகவேந்திரன் சிறப்புரை ஆற்றினார். சுரேஷ், மோகன்ராவ், ராஜசேகர், பழனிவேல், சுப்பிரமணி, சண்முகசுந்தரராஜ், நடராஜன், ரெங்கசாமி ஆகிய மாநில நிர்வாகிகள் பேசினர். ஈராண்டு அறிக்கையை மோகன் வாசித்தார். தணிக்கையை குமார் சமர்ப்பித்தார்.இன்று நடைபெறும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    ×