search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Variety"

    • டி.பி.எஸ்.5 என்ற ரகமானது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கார் மற்றும் பிந்தைய பிசான பருவங்களில் பயிரிடலாம்.
    • இப்பயிர் ரகமானது தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு, புகையான் போன்ற நெல் பயிரை தாக்கும் பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருங்குளம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் மிக விரும்பி பயிரிடப்படும் அம்பை 16 நெல் ரகமானது சுமார் 32 வருடங்களுக்கு முன்பாக வெளியிட்ட நெல் ரகமாகும். தற்பொழுது இந்த ரகத்துக்கு மாற்றாக டி.பி.எஸ்.5 என்ற ரக மானது தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கார் மற்றும் பிந்தைய பிசான பருவங்களில் பயிரிடலாம். மேலும் இப்பயிர் ரகமானது தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு, புகையான் போன்ற நெல் பயிரை தாக்கும் பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. இந்த ரகத்தின் வயது 115 முதல் 118 நாட்கள் கொண்டது. மேலும் நல்ல அரவைத் திறன் கொண்டது. அம்பை 16 ரகத்தை விட 14 சதவீதம் அதிக விளைச்சல் தரக்கூடியது. சராசரி மகசூல் ஹெக்டேருக்கு 6000 முதல் 6300 கிலோ வரை தரக்கூடியது.

    பிசான பருவத்தில் மற்றொரு ரகமான கோ51 ரகத்தை விவசாயிகள் பரவலாக பயிரிட்டு வருகின்றனர். 2013 -ம் ஆண்டில் அறிமுகமான இந்த ரகம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த ரகத்தில் குலை நோய், இலை உரை கருகல் நோய், வெள்ளை தத்துப்பூச்சி நோய் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. அதாவது சராசரி மகசூல் ஹெக்டருக்கு 6500 முதல் 11,500 கிலோ வரை தரக்கூடியது. இந்த ரகத்தின் வயது 105 முதல் 110 நாட்கள் கொண்டது.

    தற்போது கருங்குளம் மற்றும் வல்லநாடு ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவு விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நெல் ரகங்களை மானியத்தில் பெற்று சாகுபடி செய்து அதிக லாபம் பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×