என் மலர்
நீங்கள் தேடியது "RESOLUTION TO STOP ALL TRAINS IN ARIYALUR STATION"
- அரியலூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்
அரியலூர்:
அரியலூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-வது மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகளுக்கு விளை நிலங்கள் கொடுத்தது போக எஞ்சியுள்ள நிலங்களில் சிறு, குறு தொழிற்சாலைகளை தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்.
காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை காடுகளாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும், அல்லது ஏரி, குளங்களாகவும் மாற்ற வேண்டும்.
அரியலூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், அரியலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர்காக்கும் உயரிய சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.
அரியலூரில் சுரங்கம் தொடர்பான கல்வி முறையை தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு அக்கட்சி நிர்வாகி கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இரா.உலகநாதன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். மாநில நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை, மக்களுக்குரிய பிரச்னைகள் குறித்து பேசினார். மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி அமைப்பு நிலை அறிக்கையை வாசித்தார். மாநாட்டில், 17 பேர் கொண்டு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






