என் மலர்
நீங்கள் தேடியது "resistance to authorities"
- பொது வழியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட வீடு இடிப்பதற்கு சென்றனர்.
- சர்வேயர் மீண்டும் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் பொதுவழியை ஆக்கிரமித்து ஒரு வீடு கட்டி உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பொது வழியில் வீடு இருந்தால் இடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்த விடப்பட்டது.
அதன்படி இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் பொது வழியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட வீடு இடிப்பதற்கு சென்றனர். அப்போது வீட்டை இடிக்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் எதிர்ப்பு தெரிவித்த நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், ஏற்கனவே வீடு அளவீடு செய்தது சரியாக அளக்கவில்லை. ஆகையால் தலைமை சர்வேயர் கொண்டு மீண்டும் ஒருமுறை அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தலைமை சர்வேயர் மீண்டும் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் அருகே பொது வழியில் வீடு கட்டப்பட்டதாக கூறி இடிக்க சென்ற அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






