என் மலர்
நீங்கள் தேடியது "Requirements"
- மணக்கரம்பை எம்.ஜி.ஆர் நகரில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
- வடிகால் வசதி, பொது கழிப்பிட வசதி, சமுதாயக்கூடம் ஆகியவை அமைத்து கொடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த மணக்கரம்பை எம்.ஜி.ஆர். நகர் மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும், நிரந்தர வடிக்கால் வசதி செய்யப்பட வேண்டும், பொது கழிப்பிட வசதி, சமுதாயக்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாநகர குழு ராஜன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் புனிதா, மகேஸ்வரி, உத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாநகர செயலாளர் வடிவேலன், மாவட்ட குழு குருசாமி, வசந்தி, சரவணன் ஆகியோர் பேசினர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமையல் பாத்திரம், அடுப்புடன் வந்து கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மாநகரக் குழு நிர்வாகிகள் கரிகாலன், அன்பு , கோஸ் கனி, அப்துல் நசீர், ராஜன், காதர் உசேன், அருண்குமார், வின்சிலா ராணி, பைந்தமிழ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






