search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Republic Day preparations"

    • குடியரசு தினவிழா முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • தேவையான பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தேனி:

    74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ள ப்பட வேண்டிய முன்னே ற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், 74-வது குடியரசு தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழா விற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகி கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல்,

    அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தபப்பட்ட துறை அலுவலர்கள் முறை யாக மேற்கொண்டு, குடி யரசு தின விழாவை மிகச்சிற ப்பாக கொண்டா டிட, ஒருங்கிணைந்து செயல்பட கலெக்டர் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி னார்.

    மேலும், குடியரசு தினவிழாவினை கண்டு களித்திட வருகை தருகின்ற பொதுமக்களுக்கு தேயைான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ×