search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "renewing home"

    • ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் தி்ட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
    • திட்டம் மூலம் பல ஓய்வூதியதாரர்கள் கைரேகை பதிவு செய்து ஆயுள் சான்று சமர்ப்பித்து உள்ளனர்.

    நெல்லை:

    ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் தி்ட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டம் மூலம் பல ஓய்வூதியதாரர்கள் கைரேகை பதிவு செய்து ஆயுள் சான்று சமர்ப்பித்து உள்ளனர்.

    இந்த ஆண்டு தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை அவர்களின் வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்து இருந்தது.

    இந்த ஆண்டு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் செப்டம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தபால் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சர்ப்பிக்க முடியும்.

    அதன்படி நெல்லை மாவ ட்டத்தில் தபால்காரர்கள் மூலம் சம்பந்தபட்டவர்கள் வீடுகளுக்கே சென்று ஆயுள் சான்றிதழை புதுப்பித்து வருகின்றனர்.

    பாளை மகராஜாநகர் தபால்நிலையத்தை சேர்ந்த தபால் காரர்கள் செல்வ ரத்னம், செல்வம் ஆகியோர் சீனிவாச நகரை சேர்ந்த ஒரு பயனாளி வீட்டிற்கு சென்று அவரிடம் கைரேகை பதிவுசெய்த பின்னர் ஆயுள் சான்றிதழை புதுப் பித்தனர்.  

    ×