என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of 2 constructed houses"

    • தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    • 9 பேரை கைது செய்து விடுவிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு புறம்போக்கு இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் திருவண்ணாமலை-செங்கம் செல்லும் சாலையில் கிரிவலப் பாதை உள்ளது. அந்த கிரிவலப் பாதையில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 2 வீடுகள் கட்டி வந்தனர். 80 சதவீதம் முடிந்த நிலையில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று ஆக்கிரமித்து கட்டி வரும் வீட்டின் உரிமையாளர்களுக்கு உடனடியாக அகற்றக்கோரி கால அவகாசம் வழங்கப்பட்டது.

    ஆக்கிரமிப்பை அவர்கள் அகற்றாததால் உதவி கலெக்டர் மந்தாகினி தலைமையில், தாசில்தார் சரளா, திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள பெண்கள் உள்பட சிலர் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரையில் படுத்து புரண்டும், மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கைது செய்தவர்களை எச்சரிக்கை செய்து விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×