search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduces the ability to solve"

    • மனம் சிந்தித்து கொண்டேதான் இருக்கும் அது அதன் இயல்பு.
    • முக்கியமான எண்ணங்களுக்கு மட்டும் மறுவினை ஆற்றுங்கள்.

    ஒரு சிலா் அளவுக்கு அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அவ்வாறு அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் போது நன்மை ஏற்படுவதற்குப் பதிலாக தீமையே ஏற்படுகிறது. அதீத சிந்தனை என்பது ஒரு தீய பழக்கம் அல்ல. ஆனால் அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் போது நமது மூளை குழம்பி, நாம் தேவை இல்லாத செயல்களைச் செய்து கொண்டிருப்போம்.

    அதிதீத சிந்தனை அல்லது அளவுக்கு அதிகமாக சிந்திப்பது என்பது ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். மனம் சிந்தித்து கொண்டேதான் இருக்கும் அது அதன் இயல்பு. அதன் இயல்பிலேயே ஓட விடுங்கள். தானாகவே ஓய்ந்து விடும். உங்களின் முக்கியமான எண்ணங்களுக்கு மட்டும் மறுவினை ஆற்றுங்கள். சிந்தனைகளை அடக்க நினைத்தால் அவை மேலும் வலிமை பெறும். அதன் போக்கில் விட்டுவிடுங்கள். வலிமை இழந்து விடும். அமைதி ஏற்படும்.

    தேவையற்ற சிந்தனையும், அதிகப்படியான சிந்தனையும் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக சிந்தனை நேரத்தை வீணடிக்கச் செய்துவிடும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அதில் இருந்து மீள்வதற்கு பதிலாக சிக்கலை அதிகரித்துவிடும்.

    பிரச்சினைக்கு தீர்வு காணும் திறனை குறைக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாற வைக்கும். அன்றாட செயல்பாடுகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலையை உருவாக்கும்.

    மன நிலையை பாதிக்கச் செய்து, தன்னம்பிக்கையையும் பலவீனப்படுத்திவிடும்.

    ×