search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Redmi Note 11 SE"

    • சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 சீரிஸ் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.
    • விரைவில் இந்தியா வரும் புது ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது.

    ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி, நோட் 11T 5ஜி மற்றும் பல்வேறு மாடல்கள் நோட் 11 சீரிசில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், மற்றும் ஓர் ஸ்மார்ட்போனினை ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 SE எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிரபல டிப்ஸ்டரான கேபர் சிபெக் ரெட்ம் நோட் 11 SE பெயர் அடங்கிய புது மாடல் விவரங்களை MIUI குறியீடுகளில் கண்டறிந்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கானசது என்றும் இது சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.


    MIUI குறியீடுகளின் படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10S மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் சில நாடுகளில் போக்கோ M5S எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே தகவல்களை உண்மையாக்கும் வகையில், இந்த மாடல் விவரங்கள் பல்வேறு சான்று அளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.

    தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ரெட்மி நோட் 11 SE மாடலில் ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்களே வழங்கப்படலாம். அந்த வகையில், இந்த மாடல் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G95 பிராசஸர், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வழங்கப்படும்.

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த MIUI 13 கொண்டு இருக்கும். 

    ×