search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ready-made garment export"

    • உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பொருளாதார மந்தநிலையில் ஏற்பட்டதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
    • புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து ள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளுக்கு ஆடை களை ஏற்றுமதி செய்து வர்த்தகம் நடக்கிறது.

    ஆடை ஏற்றுமதி வர்த்தகம்

    கடந்த காலங்களில் நூல் விலை உயர்வு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பொருளாதார மந்தநிலையில்  ஏற்பட்டதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அகில இந்தியளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 801 கோடிக்கு நடைபெற்றது. இது கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 22.7 சதவீதம் அதிகரிப்பு. திருப்பூரில் ஆயத்த ஆடை வர்த்தகம் மெல்ல மெல்ல ஆர்டர்கள் நடந்து வருகிறது.

    11 ஆயிரத்து 52 கோடி வர்த்தகம் 

    இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.11 ஆயிரத்து 52 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தம் ரூ.12 ஆயிரத்து 214 கோடிக்கு நடைபெற்றது.

    இது கடந்த ஆண்டை விட 10.53 சதவீதம் அதிகரிப்பு. ஆயத்த ஆடை ஏற்றுமதி சதவீதம் அதிகரித்துள்ளதால், புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து ள்ளனர்.

    ×