search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ready-made clothing"

    • பருத்தி சாகுபடி உற்பத்தி 9 லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது என்றார்.
    • அரசுக்கு வரி செலுத்துவோருக்கும் சிறந்த பாலமாக திகழ வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    கோவையில் சிட்ரா எனப்படும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில் 60வது தொழில்நுட்ப இரண்டு நாள் கருத்தரங்கு துவங்கியது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    ஜவுளித்துறையை முன்னணி தொழிலாக மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். தொழில்நுட்ப ஜவுளி தொழில் வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆயத்த ஆடை ஏற்றுமதியில்50 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்து இந்திய அளவில் இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. சமீபத்தில் ஒரு குழு ஜப்பான் சென்று ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கும், முதலீடு செய்யவும் அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் இம்மாதம் ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தப்படும். தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் 80 லட்சம் கோடி மதிப்புள்ள வணிகம் ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.

    மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில், 100 இடங்களில் குறு ஜவுளி பூங்காக்கள், 2.5 கோடி ரூபாய் மானியத்துடன் அமைக்க திட்டமிட்டுள்ளது. 2, 3 ஏக்கர் நிலத்தில் குழுவாக இணைந்து இந்த பூங்காக்களை அமைக்கலாம்.தமிழகத்தில் இதுவரை 300 பேர் இந்த பூங்கா அமைக்க விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலித்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். சேலத்தில் 109 ஏக்கரில் 500 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. பருத்தி சாகுபடி உற்பத்தி 9 லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது என்றார்.

    அகில இந்திய வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு (தென் மண்டலம்) திருப்பூர் மாவட்ட வரி பயிற்சியாளர் சங்கம், ஈரோடு, நாமக்கல் மாவட்டம் வரி பயிற்சியாளர் சங்கம் ஆகியோர் சார்பில் சங்கத்தின் 46வது நிறுவன நாள் மற்றும் வரி விதிப்பு பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர் சேம்பர் ஹாலில் நடந்தது.

    இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசுகையில், நாட்டில் உள்ள தற்போதைய ஏற்றுமதி சூழல்கள் குறித்தும், குறிப்பாக திருப்பூருக்கு உண்டான ஏற்றுமதி வாய்ப்புகள், வரும் காலங்களில் 30 சதவீதம் வரை உயர்த்துவதற்கு, வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கை தயாராக உள்ளது. இவை ஏற்பட்டால் திருப்பூர் நகரத்துக்கு மிகுதியான ஆர்டர்கள் வரும் என்று தெரிவித்தார்.

    கோவை, இந்திய வரி பயிற்சியாளர் இன்ஸ்டிடியூட் முன்னாள் தலைவர் ஆடிட்டர் ராமசாமி பேசுகையில், வரி பயிற்சியாளர்கள் தங்களை எவ்வாறு மேம்படுத்தி கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி., - டி.டி.எஸ்., போன்ற வரியினங்கள் சார்ந்த அரசின் சுற்றறிக்கைகளை அவ்வப்போது தெரிந்து கொண்டு தங்களது பயிற்சியினை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அரசுக்கு வரி செலுத்துவோருக்கும் சிறந்த பாலமாக திகழ வேண்டும் என்றார்.

    திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்நாட்டு விற்பனை பனியன் ஆடை உற்பத்தி செய்யும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் நூல் விலை குறைந்து, புதிய ஆர்டர்கள் குவிந்து வருவதால் மீண்டும் நம்பிக்கையுடன் தொழிலை நகர்த்த அனைத்து தரப்பினரும் தயாராகி விட்டனர்.தீபாவளி பண்டிகை ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், கடைசி நேர விசாரிப்பும், விற்பனையும் கை கொடுத்தது. அதன்பின் நூல் விலை குறைந்துள்ளதால் புதிய பண்டிகை ஆர்டர்களை ஏற்கவும், பண்டிகைகால ஆடை விற்பனைக்காகவும், உற்பத்தியை துவக்கிவிட்டனர்.

    தீபாவளிக்கு அடுத்ததாக நாடு முழுவதும் கொண்டாடும் பண்டிகை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு. அதன்பின் தைப்பொங்கல் பண்டிகைக்கான தமிழக விற்பனை என அடுத்தடுத்த திட்டங்களுடன் பனியன் ஆடைகள் உற்பத்தி தொடங்கி விட்டது.

    தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக கடைகள் மூலமாக, இருப்பு வைத்திருந்த ஆடைகள், தமிழகம் முழுவதும் விற்பனையானது. அதனால் பெங்களூரு, சென்னை, புதுச்சேரி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மொத்த விற்பனை கடைகள் நடத்துவோர் திருப்பூருக்கு வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

    தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களில் இருந்து பண்டிகை ஆர்டர்கள் கிடைப்பதால் உள்நாட்டு பனியன் விற்பனை நிறுவனங்கள், புது உற்சாகத்துடன் உற்பத்தியை தொடங்கி விட்டன. பிராண்டடு நிறுவனங்கள், ஜாப் ஒர்க் முறையில் உற்பத்தி செய்து கொடுக்கும் நிறுவனங்கள் மட்டுமல்லாது, உள்ளூர் சந்தைக்கான பர்முடாஸ், பனியன் பேன்ட், டி-சர்ட், பெண்கள் உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனங்களும், உற்பத்தியை துவக்கியுள்ளன. 

    ×