search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reading Programme"

    • மாணவ- மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • வாசிப்பு திறன் அதிகரிக்க ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை அரசு நூலகத்திற்கு சென்று வாசிக்கவேண்டும்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் நூலக வாசிப்பு விழா நடைபெற்றது.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் முருகேஸ்வரி ராஜதுரை தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, நூலகர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை அம்மாசி அனைவரையும் வரவேற்றார்.

    மாணவ- மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ- மாணவியர்கள் அனைவருக்கும் நாளிதழ்கள் வழங்கப்பட்டு அனைவரையும் வாசிக்க வைத்தனர். வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை அரசு நூலகத்திற்கு சென்று வாசிக்கவேண்டும் எனவும், அப்போதுதான் மூளை வளர்ச்சி அதிகரிக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. உதவி தலைமையாசிரியை ராணி, இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் பொன்வள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×