என் மலர்

  நீங்கள் தேடியது "Ration rice at low price from ration shop sellers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெட்டிப்பட்டி சந்திப்பில் நேற்று முன்தினம் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
  • 1,850 கிலோ ரேசன் அரிசி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.


  சேலம்:


  சேலம் மாவட்ட உணவ பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ரெட்டிப்பட்டி சந்திப்பில் நேற்று முன்தினம் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் அடுத்தடுத்து வந்த 2 வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஒரு வேனில் 2,800 கிலோ ரேசன் அரிசி, மற்றொரு வேனில் 1,850 கிலோ ரேசன் அரிசி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அதில் இருந்த டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் டிரைவர்கள் சோளம்பள்ளம் காந்திநகரை சேர்ந்த விஜய் (34), பழைய சூரமங்கலம் கூத்தாண்டவர் கோவில் ஜாபர் (21) என தெரிந்தது. இவர்கள், பொதுமக்களிடம் இருந்தும், ரேசன் கடை விற்பனையாளர்களிடம் இருந்தும் குறைந்த விலைக்கு ரேசன் அரிசி வாங்கி அதை மொத்தமாக சேர்த்து கோழி தீவின ஆலை, வெளி மாநிலங்களுக்கு கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து வேனுடன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜய், ஜாபரை கைது செய்தனர். ரேசன் அரிசி கடத்தல் கும்பல் தலைவனான பூசாரிப்பட்டியை சேர்ந்த குமாரை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


  ×