என் மலர்
நீங்கள் தேடியது "Ranaway"
- சேலம் வாலிபர் புதுப்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
- புதுப்பெண் வீட்டுக்கு சென்ற வாலிபர் தகராறில் ஈடுபட்டார். மேலும் பெண்ணை தாக்கவும் முயன்றார்.
குழித்துறை:
அருமனை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
சென்னை என்ஜினீயருக்கும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது. இளம்பெண் பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அங்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இதனால் பெண்ணின் திருமணமத்திற்கு சேலம் வாலிபரும், பெங்களூருவில் அவருடன் பணிபுரிந்தவர்களும் வந்தனர். மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.
இந்நிலையில் சேலம் வாலிபர், புதுப்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் புதுப்பெண்ணிடம் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஏன்? என்று புதுப்பெண் கேட்டபோது, அவர் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை எனவும், பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை என்றால் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன புதுப்பெண், சேலம் நண்பரின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டார். மேலும் இதுபற்றி கணவரிடமும் கூறினார்.
இதற்கிடையே சேலம் நண்பரின் போனை புதுப்பெண் எடுக்காததால் அவர் சேலத்தில் இருந்து மீண்டும் மார்த்தாண்டம் வந்தார். இங்கு புதுப்பெண் வீட்டுக்கு சென்ற அவர், தகராறில் ஈடுபட்டார். மேலும் அந்த பெண்ணை தாக்கவும் முயன்றார்.
இதனால் பயந்து போன பெண் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் சேலம் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






