என் மலர்
நீங்கள் தேடியது "Rallia Dam"
- கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் மழை காரணமாக ரேலியா அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- நேற்று 42.3 அடி உயரம் கொண்ட ரேலியா அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரி நிர் வெளியேறி வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று குன்னூர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு ரேலியா, பந்தினி உள்ளிட்ட அணைகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் மழை காரணமாக ரேலியா அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 42.3 அடி உயரம் கொண்ட ரேலியா அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரி நிர் வெளியேறி வருகிறது.
கடந்த ஜனவரி, ஜூன் மாதங்களில் முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேறியதை தொடர்ந்து இந்த ஆண்டு 3-வது முறையாக நேற்று உபரி நீர் வெளியேறியது.






