என் மலர்
நீங்கள் தேடியது "Rajendira Wisdom School"
- விழாவில் எண்களை மையமாக கொண்டு குழந்தைகள் பாடல் பாடி, நடனம் ஆடினர்.
- ஆசிரியை விஜயலெட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சுரண்டை:
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர்களால் எண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் முருகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் எண்களை மையமாக கொண்டு குழந்தைகள் பாடல் பாடி, நடனம் ஆடி திறமையை வெளிப்படுத்தினர். தாங்கள் கொண்டு வந்த எண்களின் பொருட்களை காட்சிப்படுத்தினர். அதனை கொண்டு செயல்பாடுகள் செய்தனர். மாணவர்கள் ஜெய்வேலன் மற்றும் ராம்திலக் சிறப்புரையாற்றினர். ஆசிரியை விஜயலெட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியை மஞ்சுளா மாணவர்களை ஒருங்கிணைத்தார்.






