search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainy Neer"

    • பரமக்குடி அருகே மழை நீர் சூழ்ந்த வீடுகளை முருகேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கனமழை கொட்டியது.

    பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பரமக்குடி அருகே உள்ள கீழப் பார்த்திபனூர், இடையர் குடியிருப்பு, சூடியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்களில் அள்ளி வெளியேற்றினர். வீடுகளை விட்டு வெளியே வராமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    இதுகுறித்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி எம்.எல்.ஏ. முருகேசன், தாசில்தார் தமிம்ராஜா ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் மின் வாரிய அதிகாரிகளை அழைத்து இந்த பகுதியில் ஆபத்து ஏற்படாத வகையில் மின் விநியோகம் செய்யவேண்டும் என எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    ×