என் மலர்
நீங்கள் தேடியது "Railway flyover completed"
- 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவி க்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.
- கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்த மக்களும், போக்குவரத்து வழக்கமான நடைமுறையில் இருக்கும் என்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாநகராட்சி எல்லையில் இருந்து சிலுவத்தூர் செல்லும் சாலையில் பாலகிருஷ்ணா புரம் பகுதியில் திண்டுக்கல் -பழனி, திண்டுக்கல்-கரூர், திண்டுக்கல்-திருச்சி என அடுத்தடுத்து 3 ரெயில்வே பாதைகள் உள்ளன.
இதனால் அடுத்தடுத்து ரெயில்வே கேட் மூடப்படுவதால் திண்டுக்கல் புறநகர் பகுதியில் இருந்து கோவிந்தராஜ்நகர், சந்துருநகர், மாசிலாமணி புரம் மற்றும் ராஜக்காபட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்றுவர மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே தண்ட வாள பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்ய ப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவி க்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.
இதில் நகர்புறத்தில் 29 பேரிடமும், ஊராட்சி பகுதியில் 72 பேரிடமும் நிலம் கையகப்படுத்த ப்பட்டது. ஆனால் அரசின் இழப்பீட்டு தொகை போதாது எனக்கூறி நகர்புற நில உரிமையாளர்கள் சிலர் நிலத்தை ஒப்படைக்க மறுத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். ஊராட்சி பகுதிகளில் உள்ளவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் நிலத்தை ஒப்ப டைக்க சம்மதம் தெரிவித்த தால் அந்தபகுதியில் மட்டும் பாலம் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது.
மேலும் ரெயில்வே நிர்வாகம் ரெயில் கடக்கும் இடத்திற்கு மேலாக தங்கள் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணியை விரை வாக கட்டி முடித்தனர். ரெயில்வே தண்டவாள த்திற்கு கீழே சுரங்கப்பாதை களையும் அமைத்து பணியை முடித்துக்கொண்ட னர். இதனால் அந்த பகுதியில் மட்டும் பாலம் துண்டு துண்டாக காட்சி யளித்தது.
நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பாலம் கட்டுமானப்பணி பல ஆண்டுகளாக நீடித்தது. திண்டுக்கல் புறநகரை சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம் உள்ளி ட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சாலையில் செல்பவர்கள் சிலுவத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் சுமார் 8 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வந்த மேம்பால பணிகள் பல்வேறு போராட்டங்க ளுக்கு பிறகு மீண்டும் விரைவுபடுத்தப்பட்டது.
நிலம் கொடுத்தவர்களின் இழப்பீடு பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. பாலத்தில் மின்விளக்குகள் பொருத்துதல், தார்ச்சாலை அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பாலத்தை வருகிற 4-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சாலையில் போக்குவரத்து வழக்கமான நடைமுறையில் இருக்கும் என்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






